‘சுப்ரமணியபுரம் 2’ எடுக்க மாட்டேன்-சசிகுமார்

top-news
FREE WEBSITE AD

சென்னை, ஆக. 13-

2008ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘சுப்ரமணியபுரம்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் திட்டம் இல்லை என நடிகரும் இயக்குநருமான சசிகுமார் தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவரிடம், ‘சுப்ரமணியபுரம் 2’ குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சசிகுமார், பலரும் தொடர்ந்து இரண்டாம் பாகத்தை உருவாக்குமாறு கேட்டுக்கொண்டதாகத் தெரிவித்தார்.

ஆனால், ‘சுப்ரமணியபுரம்’ வெளியாகி 18 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், ரசிகர்கள் அந்தப் படத்தை இன்றளவும் கொண்டாடி வருவதாக அவர் கூறினார்.

அந்த வரவேற்பை கெடுக்க விரும்பாததால், ‘சுப்ரமணியபுரம் 2’ படத்தை இயக்கப் போவதில்லை என சசிகுமார் தெளிவுபடுத்தியுள்ளார்.

‘சுப்ரமணியபுரம்’ திரைப்படத்தை சசிகுமார் எழுதி, இயக்கி, தயாரித்ததுடன் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். மதுரையை பின்னணியாகக் கொண்டு உருவான இப்படத்தில் ஜெய், சுவாதி, கஞ்சா கருப்பு, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *