“இதயம் முரளி” படத்தின் “கட்டழகி” பாடல் நாளை வெளியீடு
- Surendran Sumdraraj
- 01 Jul, 2026
சென்னை, ஜூலை 1 –
நடிகர் அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள ‘இதயம் முரளி’ திரைப்படத்தின் “கட்டழகி” பாடல் நாளை (ஜூலை 1) வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் அதர்வாவுடன் பிரீத்தி முகுந்தன், கயாது லோஹர், நட்டி நட்ராஜ், ரக்சன், பகத் பாசில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
ஏற்கனவே இப்படத்தின் நான்கு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. தற்போது “கட்டழகி” பாடல் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
மேலும், சமீபத்தில் நடிகர் பகத் பாசில் தனது டப்பிங் பணிகளை நிறைவு செய்ததாகப் படக்குழு அறிவித்திருந்தது. அனைத்து பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ‘இதயம் முரளி’ திரைப்படம் வருகிற ஜூலை 10-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



