மாணவர்களைத் துன்புறுத்தினால் மீண்டும் வீதிகளில் இறங்குவோம் – அபிஜீத் தீப்கே எச்சரிக்கை
- Surendran Sumdraraj
- 30 Jul, 2026
புதுடெல்லி, ஜூலை 30-
நீட் தேர்வு தொடர்பான போராட்டங்களில் பங்கேற்ற மாணவர்களைப் போலீசார் தொடர்ந்து துன்புறுத்தினால், மீண்டும் நாடு தழுவிய அமைதியான போராட்டங்களை முன்னெடுப்போம் என்று காக்ரோச் ஜனதா கட்சியின் (CJP) நிறுவனர் அபிஜீத் தீப்கே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்களைக் குறிவைத்து நடவடிக்கை எடுப்பதையும், பழிவாங்கும் நோக்கில் அவர்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்வதையும் அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காகவே அவர்கள் போராடியதாகவும், அவர்களை குற்றவாளிகளைப் போல நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் கூறியுள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



