சாதனையாளர்களின் சாதனைகளை முறியடித்த 15 வயது டைவின் இஹெமி

top-news

லண்டன், செப். 26-

செய்தி-வெற்றி மைந்தன்

'லைட்ட்னிங்' என்று அழைக்கப்படும் 15 வயது புரோகுனர் டைவின் இஹெமி, தனது சக வயதில் உலக புகழ் பெற்ற ஓடவர்கள் உசைன் போல்ட், நோவா லைல்ஸ், கவுட் கவுட்டை விட வேகமான நேரத்தை பதிவு செய்து உலகளாவிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

ஆக்ஸ்போர்ட்ஷயரின் ரேட்லி பகுதியைச் சேர்ந்த இஹெமி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 14 வயதே இருக்கும்போது 100 மீட்டர் ஓட்டத்தில் 10.30 வினாடிகள் என்ற அபார நேரத்தை பதிவு செய்தார். இந்த சாதனை, அதற்கு முன் உலக 15 வயதுக்குட்பட்ட சாதனையாக இருந்த ஜமைக்காவின் சசின் டென்னிஸ் படைத்த 10.51 வினாடிகள் என்ற நேரத்தை முற்றிலும் முந்தியது.

இந்தச் சாதனைக்கு ஒப்பாக, சமீபத்தில் டோக்கியோ உலக சாம்பியன்ஷிப் 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்ற நோவா லைல்ஸ், தனது 14-15 வயதில் சுமார் ஒரு வினாடி மெதுவாக ஓடியிருந்தார். அதேபோல், உசைன் போல்ட்டின் இளம் வயது சாதனைகளையும் இஹெமி மீறியுள்ளார்.

இந்தச் சாதனை, விளையாட்டுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஹெமியின் இயல்பான திறமை, கடின உழைப்பு, அவரை எதிர்கால ஓலிம்பிக் நட்சத்திரமாக உருவாக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர். பிரிட்டனின் இளம் திறமைகளை வளர்ப்பதில், இந்த சாதனை ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *