சீனாவில் வசூல் வேட்டையாடும் விஜய் சேதுபதியின் மஹாராஜா திரைப்படம்!

top-news

நடிகர் விஜய் சேதுபதியின் மகாராஜா படம் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி 100 கோடி ரூபாய் கலெக்ஷனை சர்வதேச அளவில் குவித்திருந்தது. இந்நிலையில் இந்த படம் கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக சீனாவில் ரிலீஸ்செய்யப்பட்டுள்ளது. சீன மொழியில் மொழி மாற்றம் செய்யப்பட்டு, அங்கு 40,000 திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில் படம் கடந்த மூன்று நாட்களில் 26 கோடிகளுக்கும் மேல் வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் கதைக்களத்தில் அப்பா மற்றும் மகளுக்கு இடையிலான பாசப்பிணைப்பை மையமாக வைத்து திரில்லர் பாணியில் படத்தின் கதைகளத்தை உருவாக்கியிருந்தார் இயக்குநர் நிதிலன் சாமிநாதன்.

படத்தில் விஜய் சேதுபதியுடன் சாச்சனா, அபிராமி, சிங்கம்புலி, அனுராக் காஷ்யப் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். குரங்கு பொம்மை படத்தை அடுத்து பல ஆண்டு இடைவெளியில் இந்த படத்தை நிதிலன் சாமிநாதன் கொடுத்திருந்தாலும் அடுத்த படத்திலும் தன்னை சிறப்பான இயக்குநராகவே அவர் மக்களுக்கு வெளிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் சீனாவில் வெளியிடப்பட்டுள்ள இந்தப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தை காண தொடர்ந்து சீன ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதையடுத்து அடுத்ததாக ஜப்பானிலும் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் முன்னதாக வெளியிடப்பட்ட ரஜினிகாந்தின் 2.ஓ படத்தின் வசூலை இந்த படம் முறியடித்துள்ளதாக தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவில் இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக டிக்கெட் புக்கிங் செய்பவர்களுக்கு ஒவ்வொரு டிக்கெட்டிற்கும் சிறிய அளவிலான குப்பைத் தொட்டியை படக்குழுவினர் பரிசாக கொடுத்தது அனைவரையும் கவரும் வகையில் அமைந்திருந்தது.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *