விஜய் பிறந்தநாளில் விஜய்யின் 'ஜனநாயகன்' கிளிம்ப்ஸ் வீடியோ!

top-news

நடிகர் விஜய் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக, அவர் நடிக்கும் கடைசி திரைப்படமான 'ஜனநாயகன்' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது.இந்த வீடியோ தற்போது இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.

இன்று அதிகாலை 12 மணிக்கு வெளியான இந்த வீடியோ, "என் நெஞ்சில் குடியிருக்கும்" என விஜய்யின் குரலுடன் தொடங்குகிறது. மேலும், போராட்ட களம் போன்ற பகுதியில் கையில் வாளுடன் போலீஸ் உடையில் விஜய் நடந்து வரும் காட்சி, முறுக்கு மீசை கெட்டப்பில் இருக்கும் காட்சி ஆகியவை விஜய் ரசிகர்களுக்கான மிகப்பெரிய விருந்தாகப் பார்க்கப்படுகிறது.

இந்த வீடியோ தொடங்கும் போது, "உண்மையான தலைவர் மக்களுக்காக மட்டுமே எழுகிறார், அதிகாரத்திற்காக அல்ல"என்றும் ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுற்றிலும் நெருப்பு இருக்கும் பகுதியில் விஜய் மாஸாக நடந்து வரும் காட்சியும் இடம்பெற்றுள்ளது. இந்த கிளிம்ப்ஸ் வீடியோவிலிருந்து, விஜய் இந்த படத்தில் ஒரு ஆக்ரோஷமான காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள இந்தப் படத்தில், மமிதா பாஜு, பிரகாஷ் ராஜ், கௌதம் மேனன், ப்ரியா மணி, நரேன் உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். எச் வினோத் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *