வரும் ஐரோப்பிய கால்பந்து தொடரில் ரியல் மாட்ரிட் அணிக்காக எம்பாபே விளையாடுவார் ?

top-news
FREE WEBSITE AD

2023- 2024 ம் ஆண்டிற்கான ஐரோப்பிய தொடரை ரியல் மாட்ரிட் அணி கைப்பற்றி இருந்த நிலையில், 2024- 2025ம் ஆண்டிற்கான ஐரோப்பிய கால்பந்து தொடரில் ரியல் மாட்ரிட் அணிக்காக எம்பாபே விளையாடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

2023- 2024 ம் ஆண்டிற்கான ஐரோப்பிய தொடரில் மற்றொரு கிளப்பான பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (PSG) கிளப்பிற்காக விளையாடிய எம்பாபே அடுத்த வருடத்தில் ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாட இருப்பதாக கிட்ட தட்ட உறுதியாகி உள்ளது.

இதனால், ரியல் மாட்ரிட் கிளப்பின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தாலும் மறுபுறம் பிரான்ஸ் நாட்டு ரசிகர்கள் சற்று ஏமாற்றத்தில் தான் இருக்கின்றனர். இந்த அதிகாரப்பூர்வ தகவலை ரியல் மாட்ரிட் அணி வருகிற வாரத்தில் அறிவிக்க உள்ளதாகவும் தெரிகிறது.

மேலும், வெளியான தகவலின் படி எம்பாபே வருகிற 2029ம் ஆண்டு வரை ரியல் மாட்ரிட் கிளப்பிற்காக விளையாட இருப்பதாக ஒப்பந்தம் செய்யவுள்ள நிலையில் ஒரு தொடருக்கு 15 மில்லியன் யூரோக்கள் அவருக்கு வழங்கப்படும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதனால், இந்த இடமாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை ரியல் மாட்ரிட் வருகிற வார நாட்களில் வெளியிடலாம் என கால்பந்து ரசிகர்களால் எதிர்ப்பார்க்கப்படுகிறது. தகவலை ரியல் மாட்ரிட் வருகிற வார நாட்களில் வெளியிடலாம் என கால்பந்து ரசிகர்களால் எதிர்ப்பார்க்க

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *