இந்தி பிக்பாஸ் 18 நிகழ்ச்சியில் ஸ்ருதிஹா வரும் வாரம் காப்பாற்றப்படுவாரா?வெளியேறுவாரா?
- Muthu Kumar
- 17 Oct, 2024
தமிழ் பிக் பாஸ் 8வது சீசன் தொடங்கிய தினத்தன்று ஹிந்தி பிக் பாஸ் 18-வது சீசனும் தொடங்கியது. விஜய் சேதுபதி தமிழில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதைப் போலவே, ஹிந்தியில் சல்மான் கான் இதனைத் தொகுக்கிறார்.இதற்கிடையில், விஜய் டிவியின் “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் டைட்டில் வெற்றி பெற்ற ஸ்ருதிஹா, ஹிந்தி பிக் பாஸில் முதல் தமிழ் நடிகையாக கலந்து கொண்டுள்ளார்.
ஸ்ருதிஹா பள்ளி படிக்கும் போது நான்கு படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஆனால் அந்த படங்கள் பெரிய அளவில் வெற்றியளிக்கவில்லை. “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் பிக்பாஸ் 8க்கு முன்னதாக, ஸ்ருதிஹா பெரும் புகழ் பெற்றார். ஆனால், தமிழில் கலந்து கொள்ளாமல், ஹிந்தி பிக் பாஸில் தான் கலந்து கொண்டுள்ளார். அவர், முதல் நாளிலிருந்து தமிழ் நடிகையாக தமிழ்நாட்டின் பிரபலமாகவே தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார். முதல் நாளில் சல்மான் கானிடம், தமிழ் ரசிகர்களுக்கு வணக்கம் சொல்லுமாறு கேட்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் சில நிகழ்வுகள் நடந்துகொண்டிருக்கும் நிலையில், கடந்த வாரத்தில் ஸ்ருதிஹா மற்றும் ஹிந்தி நடிகை ஆலிஷ் கௌஷிக் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பிக் பாஸ் போட்டியாளர்களின் பெயர்களுடன் தொடர்புடைய ஒரு டாஸ்க்கில், ஸ்ருதிஹா கூறியது, “என்னை முதுகுக்கு பின்பு பேசுகிறார்கள்” என வருத்தம் தெரிவித்தார். தனது பாரம்பரியத்தை மாறாமல் வைத்துக் கொண்டு, நிகழ்ச்சியில் இருப்பதாக கூறியுள்ளார். தன்னை முட்டாள் என முதுகுக்கு பின்னால் சொல்கின்றனர் என குற்றம் சாட்டினார்.
ஆலிஷ், ஸ்ருதிஹாவை முட்டாள் என கூறவில்லை என்று மறுப்பு தெரிவித்தார். இதற்கு பதிலளித்த ஸ்ருதிஹா, “எனக்கு கேலிக்கும் ஜோக்குக்கும் வித்தியாசம் தெரியும், ஆனால் நீங்கள் என்னை கேலி செய்கிறீர்கள்” என்றார். இந்த உரையாடல், ஸ்ருதிஹாவின் கணவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். இந்த வாரம் ஸ்ருதிஹா எலிமினேஷனுக்கான நாமினேஷன் பட்டியலில் உள்ளார். அவர் ரசிகர்கள் வாக்களித்து காப்பாற்றப்படுகிறாரா, அல்லது வரும் வாரத்துடன் வெளியேறுவாரா என்பதில் அனைவரும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *