எம்.பி ஆகிறாரார் விஜயபிரபாகரன் - ரிஷிவந்தயத்தில் பிரேமலதா!

top-news
FREE WEBSITE AD

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக கூட்டணி அரசியல் தீவிரமடைந்துள்ளது. தே.மு.தி.க. தலைவி பிரேமலதா விஜயகாந்த் திமுக கூட்டணியில் இணைந்துள்ள நிலையில், ரிஷிவந்தியம் தொகுதியில் அவர் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது திமுகவுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக கூட்டணி அரசியல் தீவிரமடைந்துள்ளது. தே.மு.தி.க. தலைவி பிரேமலதா விஜயகாந்த் திமுக கூட்டணியில் இணைந்துள்ள நிலையில், ரிஷிவந்தியம் தொகுதியில் அவர் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது திமுகவுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் தே.மு.தி.க. 10 தொகுதிகள் + ஒரு ராஜ்யசபா சீட் கோரியது. திமுக 6 தொகுதிகள் + ஒரு ராஜ்யசபா பதவி வழங்க முன்வந்துள்ளது. விருத்தாசலம் அல்லது ரிஷிவந்தியம் தொகுதியில் பிரேமலதா போட்டியிட வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

ரிஷிவந்தியம் தொகுதியில் கடந்த இரு சட்டசபைத் தேர்தல்களிலும் திமுக வெற்றி பெற்றுள்ளது. தற்போதைய எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் கள்ளக்குறிச்சி மாவட்ட திமுக செயலராகவும் உள்ளார். பிரேமலதா போட்டியிட்டால் தன்னால் மீண்டும் போட்டியிட முடியாது என்பதால், அவர் கடும் வருத்தத்தில் உள்ளார். தொகுதிக்காக பல திட்டங்களை தீட்டி, நிறைய பணத்தை செலவு செய்துள்ளதால் எப்படி சமாளிப்பது என கட்சியினருடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட திமுக நிர்வாகிகள் கூறுகையில், 'ரிஷிவந்தியம் தொகுதி திமுகவுக்கு சாதகமாக உள்ளது. இரு தேர்தல்களாக வெற்றி பெற்றுள்ளோம். இப்போது பிரேமலதா போட்டியிடுவார் என்றால் பெரும் சவால் ஏற்படும். கட்சியினர் கலக்கத்தில் உள்ளனர்' என்றனர்.

தே.மு.தி.க.வின் இணைப்பு திமுகவுக்கு தென் மாவட்டங்களில் கூடுதல் வலு சேர்க்கும் என்றாலும், சில தொகுதிகளில் உள்ளூர் திமுக தலைவர்களுக்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேமலதா ரிஷிவந்தியத்தில் போட்டியிட்டால், வசந்தம் கார்த்திகேயன் தொகுதி மாற்றம் அல்லது வேறு வழியில் சமாளிக்க வேண்டிய நிலை ஏற்படும். 2026 தேர்தலில் இந்த தொகுதி மிக முக்கியமான போட்டி களமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *