ஷா ஆலமில் லட்சக்கணக்கான பாலியல் பொம்மைகள்! போலீஸார் கைப்பற்றினர்!

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 5: ஷா ஆலமில் உள்ள ஒரு கிடங்கில் அரச மலேசிய சுங்கத் துறையினர் நடத்திய சோதனையில் லட்சக் கணக்கான ரிங்கிட் மதிப்புள்ள பாலியல்  பொம்மைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடந்த மே 20 ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 20 லட்சம் வெள்ளி  மதிப்புள்ள 11,220 யூனிட் பாலியல் பொம்மைகள் கைப்பற்றப்பட்டதாக சுங்கத்துறையின் மத்திய மண்டல உதவி இயக்குநர் நோர்லேலா இஸ்மாயில்,  கூறினார்.

இந்த ஆண்டின் மிகப்பெரிய கடத்தல் இது என்று அவர் கூறினார். கடந்த ஆண்டு இதேபோன்ற சோதனையில்  50,000 வெள்ளி மதிப்பிலான பொருள்கள் மட்டுமே கைப்பற்றப்பட்டதாக, இன்று  செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

இந்நிலையில், விசாரணையில் உதவுவதற்காக 60 வயதான கிடங்கு மேலாளர் கைது செய்யப்பட்டார்,  

சம்பந்தப்பட்ட அந்தக் கிடங்கு மூன்று ஆண்டுகளாக செயல்பட்டு வந்ததும், பாலியல் பொம்மைகள் தவிர மற்ற பொருட்களும் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

இந்தப் பொருட்கள் ஆன்லைன் மற்றும் கடையில் விற்பனைக்கு இருந்தன என்று நம்பப்படுவதாக, நோர்லேலா மேலும் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *