கேளிக்கை மையத்தில் 190 வெளிநாட்டினர்கள் கைது!
- THINAGAREN SANGGAREN
- 20 Oct, 2026
அக்தோபர் 20,
தலைநகரில் தேசிய குடிநுழைவு துறையினர் மேற்கொண்ட சோதனையில் சட்டவிரோதமாக மலேசியாவில் தங்கியிருந்த 190 வெளிநாட்டினர்கள் கைது செய்யப்பட்டனர். கோலாலம்பூரின் Kampung Pandan கேளிக்கை மையத்தில் அதிகாலை 4 மணிக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 235 வெளிநாட்டினர்கள் தடுத்து வைக்கப்பட்டதாகவும் அவர்களில் 99 ஆண்கள், 91 பெண்கள் கைது செய்யப்பட்டதாகவும் தேசிய குடிநுழைவு துறை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட அனைவரும் INDIA, BANGLADESH, INDONESIA ஆகிய நாடுகளைச் சேர்ந்த 20 முதல் 41 வயதினர் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்படவர்களிடமிருந்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பாஸ்போர்ட் உட்பட பல்வேறு போலி ஆவணங்களையும் பறிமுதல் செய்துள்ளதாகவும், சம்மந்தப்பட்ட கேளிக்கை மையத்தில் சட்டவிரோதமாக அவர்கள் வேலை செய்து வந்ததற்கான ஆவணங்களும் கிடைக்க பெற்றுள்ளதாக குடிநுழைவு துறை தெரிவித்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

