“ONLINE SCAM” மோசடிக் கும்பலில் ஈடுபட்ட 64 வெளிநாட்டினர்கள் கைது!

top-news

நவம்பர் 1,

ONLINE மூலமாக இணைய மோசடியில் ஈடுபடும் கும்பலைச் சேர்ந்த 64 வெளிநாட்டினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தேசிய குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது. கோலாலம்பூரில் உள்ள Jalan Kerinchi, சிலாங்கூர் செர்டாங் ஆகிய இரு பகுதிகளில் உள்ள சொகுசு அடுக்குமாடிக் குடியிருப்பில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் CHINA, VIETNAM, MYANMAR ஆகிய நாடுகளைச் சேர்ந்த 64 வெளிநாட்டினர்கள் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசியப் பல்லூடகப் பாதுகாப்பு ஆணையமான MCMC கடந்த 5 நாள்களாகத் தொடர்ந்து இந்த கும்பலைக் கண்காணித்து வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த கும்பல் கடந்த 2 மாதங்களில் சுமார் RM 60 லட்சத்துக்கும் மேலாக இணையம் வாயிலாக மோசடிகளைச் செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சோதனையின் போது  28 கணினிகள், 81 கைதொலைப்பேசிகள், ரொக்கமாக 51,300 ரிங்கிட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான், தென் கொரியா, அமேரிக்கா ஆகிய நாடுகளின் பாஸ்போர்ட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால் இந்த மோசடிக் கும்பலுக்கு வெளிநாட்டில் தொடர்பு இருப்பதாகவும் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தேசிய குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது. 

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்