கேளிக்கை மையத்தில் உல்லாசம்! 52 வெளிநாட்டினர்கள் கைது!
- THINAGAREN SANGGAREN
- 04 Oct, 2026
அக்தோபர் 4,
தலைநகர் DANG WANGI சாலையில் சட்டவிரோதமாக இயங்கி வந்த கேளிக்கை மையத்திலிருந்த 52 வெளிநாட்டினர்களைக் கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை கைது செய்தது. இன்று அதிகாலை 1.30 மணிக்கு 74 குடிநுழைவு அதிகாரிகளுடன் இந்நடவடிக்கையை மேற்கொண்டதாகக் கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை இயக்குநர் Datuk Hamsha Injau தெரிவித்தார். சம்மந்தப்பட்ட கேளிக்கை மையத்திலிருந்த 170 நபர்களிடம் சோதனையை மேற்கொண்டதாகவும் அவர்களில் 23 ஆண்கள் 29 பெண்கள் என மொத்தம் 52 வெளிநாட்டினர்கள் கைது செய்யப்பட்டதாகவும் Datuk Hamsha bin Injau தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட அனைவரும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினர்கள் என்றும் அனைவரும் 18 முதல் 32 வயதுக்குற்பட்டவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது. சட்டவிரோதமாக இயங்கி வந்த கேளிக்கை மையத்தில் உல்லாசமாக இருக்க இந்த வெளிநாட்டுப் பெண்கள் பயன்படுத்தப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

