“இம்மார்டல்” படம் ரசிகர்களுக்குப் புதிய அனுபவத்தை தரும் – ஜி.வி.பிரகாஷ்
- Surendran Sumdraraj
- 01 Sep, 2026
சென்னை, செப். 1 –
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ், தற்போது “இம்மார்டல்” என்ற புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார். மாரியப்பன் சின்னா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், தமிழ் ரசிகர்களுக்கு முற்றிலும் புதிய அனுபவத்தை வழங்கும் என்று ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இப்படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக கயாடு லோகர் நடித்துள்ளார். அருண்குமார் தனசேகரன் தயாரித்துள்ள இந்த திரைப்படம் விரைவில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இதுகுறித்து ஜி.வி.பிரகாஷ் கூறுகையில், காட்டேரிகளை மையமாகக் கொண்ட படங்கள் ஹாலிவுட் சினிமாவில் ஏற்கனவே பிரபலமானவை. ஆனால், தமிழ் சினிமாவில் இதுபோன்ற கதைக்களம் புதுமையானது. அந்த வகையில் “இம்மார்டல்” படம் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை ஏற்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



