மரம் விழுந்து பலியான சீன சுற்று பயணிகளின் குடும்பத்தினருக்கு நிதி உதவி

top-news
FREE WEBSITE AD

பினாங்கு, செப் 28: பினாங்கு, ஜார்ஜ் டவுனில்  மரம் ஒன்று வேரோடு  சாய்ந்து வேன் மீது விழுந்ததில்,  இரண்டு சீன சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இந்நிலையில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு, தஞ்சோங் நாடாளுமன்ற சேவை மையத்திலிருந்து 10,000 வெள்ளி நன்கொடை அளிக்கப்பட்டுள்ளது.

தஞ்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் ஹுய் யிங், ஒவ்வொரு குடும்பமும் 5,000 வெள்ளி பெற்றதாகவும், தேவைப்பட்டால் அவரது சேவை மையம் கூடுதல் உதவிகளை வழங்கும் என்றும் கூறினார்.

துணை நிதியமைச்சராக இருக்கும் லிம்,  வெளிநாட்டில் இருப்பதால், கொம்தார் சட்டமன்ற உறுப்பினர் தெஹ் லாய் ஹெங், குடும்பத்தின் பிரதிநிதிகளுக்கு  இந்த நிதியை வழங்கினார்.

கடந்த செப்டம்பர் 18 அன்று, சர்ச் ஸ்ட்ரீட்டில் உள்ள பினாங் பெரனாகன் மாளிகையின் வழித்தடத்தில்  மரம் சம்பந்தப்பட்டவர்களின் வாகனம் மீது விழுந்தது.

இதில் சீன  சுற்றுலாப் பயணிகளான 69 வயது லியு ஜு, மற்றும் அவரது மகள் 36 வயது லியு சின்க்சின் பரிதாபமாக மாண்டனர்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *