சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் விஜய்யின் பெற்றோர், நடிகை திரிஷா பங்கேற்பு
- Surendran Sumdraraj
- 15 Aug, 2026
சென்னை, ஆக. 15 —
தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் சுதந்திர தின விழா சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் இன்று நடைபெற்றது. விழாவில் முதலமைச்சர் விஜய் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
முதலமைச்சர் விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் ஷோபா சந்திரசேகர் ஆகியோரும் சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு அருகில் நடிகை திரிஷாவுக்கும் முதல் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது.
நடிகை திரிஷா தனது தாயாருடன் விழாவில் பங்கேற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழாவில் விஜய்யின் பெற்றோருக்கு அருகில் அமர்ந்திருந்த திரிஷாவின் வருகை, நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களின் கவனத்தை ஈர்த்தது.
முதலமைச்சர் விஜய் காவல்துறையினரின் அணிவகுப்பை திறந்த ஜீப்பில் சென்று பார்வையிட்டபோது, திரிஷாவும் அவரை நோக்கி சல்யூட் செய்தார். விழா நிறைவடைந்த பின்னர் விஜய் புறப்பட்டுச் சென்றபோது, அவரது பெற்றோரும் திரிஷாவும் கையசைத்து அவரை வழியனுப்பி வைத்தனர்.
விஜய் முதலமைச்சராக பதவியேற்ற நிகழ்ச்சியிலும் திரிஷா கலந்து கொண்டிருந்த நிலையில், தற்போது சுதந்திர தின விழாவிலும் அவர் பங்கேற்றிருப்பது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது. விழாவில் திரிஷா கலந்து கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



