40-க்கும் மேற்பட்ட நாடுகளுடன் இந்தியா தடையில்லா வர்த்தகம்: பிரதமர் மோடி உரை

top-news
FREE WEBSITE AD

புதுடெல்லி, ஆக. 15 —

இந்தியா தற்போது 40-க்கும் மேற்பட்ட நாடுகளுடன் தடையில்லா வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் இந்தியாவின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உலகளாவிய சந்தைகளில் புதிய வாய்ப்புகள் உருவாகியுள்ளதாகப் பிரதமர் குறிப்பிட்டார். கிடைத்துள்ள இந்த வாய்ப்புகளை இந்திய தொழில்துறையினர் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

விவசாயிகள் மற்றும் மீனவர்களின் நலன்களையும் உள்ளடக்கிய வகையில் வர்த்தக ஒப்பந்தங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக மோடி தெரிவித்தார். இந்தியாவின் உற்பத்தித் துறைக்கு கிடைக்கும் வாய்ப்புகளை எந்த வகையிலும் தவறவிடக் கூடாது என்றும் அவர் கூறினார்.

உலக சந்தையில் இந்தியப் பொருட்கள் போட்டியிடும் வகையில் அவற்றின் தரம் மேலும் உயர்த்தப்பட வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார். குறிப்பாக, ரசாயனங்கள் இல்லாத வேளாண் பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *