அமெரிக்க அரசை ஆச்சரியப்பட வைத்த இந்தியா: டிரம்ப் வெளியிட்ட பரபரப்பு பதிவு
- Surendran Sumdraraj
- 18 Aug, 2026
நியூயார்க்: இந்தியாவின் தேர்தல் நடைமுறையைப் பாராட்டி அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவு தற்போது கவனம் பெற்றுள்ளது. இந்தியாவில் வாக்காளர்களுக்கான புகைப்பட அடையாள அட்டை நடைமுறை குறித்து அவர் குறிப்பிட்டுள்ளதுடன், அமெரிக்காவிலும் இதுபோன்ற நடைமுறையை வலுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
டிரம்ப் தனது சமூக வலைத்தளப் பதிவில், இந்த மாத தொடக்கத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் ஞானேஷ் குமார் அமெரிக்க தேர்தல் நடைமுறை குறித்து தங்களது நிர்வாகத்திடம் கேட்டறிந்ததாகத் தெரிவித்துள்ளார்.
அப்போது, முறையான புகைப்பட அடையாள அட்டை இல்லாமல் அமெரிக்காவில் எவ்வாறு தேர்தல் நடத்தப்படுகிறது என ஞானேஷ் குமார் கேள்வி எழுப்பியதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் நடைபெற்ற கடந்த தேர்தலில் 64.60 கோடி வாக்காளர்கள் பங்கேற்றதாகவும், அவர்களில் ஒரு சதவீதத்திற்கும் குறைவானவர்கள் மட்டுமே தபால் வாக்குகளைப் பயன்படுத்தியதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், ஒவ்வொரு வாக்காளரும் முறையான புகைப்பட அடையாள அட்டை வைத்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



