உலகின் கப்பல் கட்டுமான மையமாக இந்தியா உருவாகும்: ராஜ்நாத் சிங் நம்பிக்கை

top-news
FREE WEBSITE AD

கொல்கத்தா: உலகின் முக்கிய கப்பல் கட்டுமான மையமாக உருவாகும் திறன் இந்தியாவுக்கு இருப்பதாக மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்காளத்தில் சுமார் ரூ.3,500 கோடி மதிப்பிலான ஐந்து திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. கொல்கத்தாவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் காணொலி வாயிலாகத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதில் கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் என்ஜினீயர்ஸ் மற்றும் யந்திரா இந்தியா நிறுவனங்களின் விரிவாக்கத் திட்டங்களும் அடங்கும்.

நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத் சிங், உலகளவில் கப்பல் கட்டுமான தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருவதாகவும், புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்ளும் திறன் இந்தியாவிடம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

கப்பல் கட்டுமானத்தில் பாரம்பரியமாக முன்னணியில் உள்ள சில நாடுகள் தங்களின் உற்பத்தியைக் குறைத்து வரும் நிலையில், இந்தியாவுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *