மோதலுக்கான களமாக விண்வெளி இருக்கக்கூடாது! – ஐ.நா.வில் இந்தியா திட்டவட்டம்

top-news

நியூயார்க்: விண்வெளி நாடுகளுக்கு இடையிலான மோதலுக்கான களமாக மாறக்கூடாது என்றும், விண்வெளியை அமைதியான நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

விண்வெளி ஆய்வுத் தொழில்நுட்பங்கள் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், பல்வேறு நாடுகள் தங்களது பாதுகாப்பு மற்றும் ராணுவத் திறன்களை மேம்படுத்த விண்வெளித் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வருகின்றன. இதனால், விண்வெளியில் ஆயுதப் போட்டி உருவாகும் அபாயம் குறித்த கவலைகள் அதிகரித்துள்ளன.

இந்தச் சூழலில், விண்வெளியை அமைதியான முறையில் பயன்படுத்துவதற்கும், அங்கு ஆயுதப் போட்டியைத் தடுப்பதற்கும் சர்வதேச நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *