இந்தியர்கள் பிரான்ஸ் செல்ல விசா தேவையில்லை? – உண்மை என்ன?
- Surendran Sumdraraj
- 24 Apr, 2026
இந்தியர்கள் இனி பிரான்ஸ் செல்ல முழுமையாக விசா தேவையில்லை என்ற செய்தி வெளியாகியுள்ள நிலையில், அதில் ஒரு முக்கிய விளக்கம் உள்ளது. உண்மையில், பிரான்ஸ் அரசு இந்தியர்களுக்கு முழுமையான “விசா இல்லா பயணம்” வழங்கவில்லை. மாறாக, விமான இடைநிலைய (transit) பயணத்திற்கான விசா கட்டாயத்தை மட்டும் நீக்கியுள்ளது.
2026 ஏப்ரல் 10 முதல் அமலுக்கு வந்த இந்த புதிய விதிப்படி, இந்தியப் பாஸ்போர்ட் வைத்துள்ளவர்கள் பிரான்ஸ் விமான நிலையங்கள் வழியாக மற்றொரு நாட்டிற்கு செல்லும்போது, இனி ‘Airport Transit Visa’ பெற தேவையில்லை.
முன்பு, பிரான்ஸ் வழியாக வேறு நாடுகளுக்கு பயணம் செய்யும் இந்தியர்கள், விமான நிலையத்தை விட்டு வெளியே செல்லாவிட்டாலும் கூட, transit visa பெற வேண்டிய கட்டாயம் இருந்தது. இந்த நடைமுறை தற்போது ரத்து செய்யப்பட்டதால், பயணம் எளிமையாகி செலவும் குறையும் என கூறப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



