இந்தோனேசிய கடலில் 700 பண்டைய கப்பல் புதையல் தளங்கள் கண்டுபிடிப்பு

top-news

ஜாகார்த்தா, டிச. 6-

இந்தோனேசியாவின் விரிந்த கடல்பரப்பில் சுமார் 700 இடங்கள் பண்டைய கப்பல் புதையல்கள் அல்லது மதிப்புமிக்க வரலாற்றுச் செல்வங்களை கொண்டிருக்கலாம் என கடல்,  மீன்வள அமைச்சு அறிவித்துள்ளது. 

அமைச்சின் ஆய்வின்படி, மூழ்கிய கப்பல்களில் இருந்திருக்கக்கூடிய கலாச்சாரப் பொருட்கள், பழமையான கலைப்பொருட்கள்,  விலையுயர்ந்த வர்த்தகச் சரக்குகள் மிக உயர்ந்த வரலாற்று மதிப்பும் பொருளாதார மதிப்பும் கொண்டவை.

கடல் மேலாண்மை இயக்குநரகத்தின் கடல் வளங்கள் தலைவர் பிரிஸ்டா யோரானிதா, வியாழக்கிழமை ஜகார்த்தாவில் பேசியபோது, கண்டறியப்பட்ட இடங்களில் சுமார் 90 சதவீதம் சீனக் கப்பல்களுடன் தொடர்புடையவை என தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *