தெங்கா விமான தளத்தில் விபத்துக்குள்ளான சிங்கப்பூர் RSAF F-16 ஜெட் ....மருத்துவ சிகிச்சை பெறும் விமானி!!!

top-news

சிங்கப்பூரின் எஃப்-16 போர் விமானம் இன்று சிங்கப்பூரில் உள்ள ராணுவ விமானத் தளத்தில் விழுந்து நொறுங்கியதில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
"பைலட் வெற்றிகரமாக பாதுகாப்பாக வெளியேறிய  பிறகு விமானம் தெங்கா விமானத் தளத்திற்குள் விழுந்து நொறுங்கியது" என்று  அறிக்கையில் தெரிவித்துள்ளது.


"விமானி சுயநினைவுடன் இருப்பதுடன் மற்றும் நடக்க முடியும் என்கிறது அந்த அறிக்கை. விமானிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதுடன் மற்ற பணியாளர்கள் யாருக்கும் காயம் இல்லை."

சிங்கப்பூர் ஜெட் விமானம் புறப்படும்போது சிக்கலை எதிர்கொண்டதாகவும், விமானி அவசரகால நடைமுறைகளுக்கு ஏற்ப பதிலளித்ததாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *