பாடகர் ஹலீம் காலமானார்!

top-news
FREE WEBSITE AD

பிரபலமான பாப் பாடகர் ஏ. ஹலீம் இன்று காலை ஜோகூரில் உள்ள பாசிர் குடாங்கில் உள்ள பெனாவர் மருத்துவமனையில் பக்கவாதத்தால் காலமானார் அவருக்கு வயது 76.

மூச்சுத் திணறல் காரணமாக அவர் புதன்கிழமை மாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவர் மறைந்த செய்தியை மலேசிய கலைஞர்கள் சங்கத்தின் செயலாளர் ஹபீஸ் நஃபியா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.  ஹபீஸின் கூற்றுப்படி, இறுதிச் சடங்கு பாடகரின் சொந்த ஊரான மசாய், ஜோகூரில் நடைபெறும்.

அப்துல் ஹலீம் முகமது தியா என்ற முழுப்பெயர் கொண்ட கலைஞர், 1960கள் மற்றும் 70களில் மலேசியா மற்றும் சிங்கப்பூரில் பிரபலமாக இருந்தார்.
அவர் டெண்டாங் தெராகிர், கிசா டான்,ஹராபன், பெர்முசிம் மற்றும் சென்ட்ராவாசிஹ் போன்ற பாடல்களுக்குப் பெயர் பெற்ற பாப் பாடகர் ஆவார்.மறைந்த பாடகர்  டி ஃபிக்ஷன்ஸ், தி வாண்டரர்ஸ் மற்றும் தி விஸ்மா உள்ளிட்ட பல குழுக்களுக்கு பாடகராகவும் பணியாற்றினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Not Ali Eh

[email protected]