காயமடைந்த ஜூனியர் என்.டி.ஆர்: 8 வாரங்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுரை

top-news
FREE WEBSITE AD

ஐதராபாத், ஜூலை 28-

 பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர்., படப்பிடிப்பின்போது ஏற்பட்ட காயம் காரணமாக 6 முதல் 8 வாரங்கள் ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஜூனியர் என்.டி.ஆர். தற்போது இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் ‘டிராகன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்து வருகிறார்.

இந்த நிலையில், எதிர்பாராத விதமாக ஜூனியர் என்.டி.ஆருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதாகத் தகவல் வெளியானது. இதையடுத்து அவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

இதுதொடர்பாக அவரது குழு வெளியிட்ட அறிக்கையில், மருத்துவர்கள் பரிசோதனை செய்த பின்னர் முழுமையாக குணமடைவதற்காக 6 முதல் 8 வாரங்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜூனியர் என்.டி.ஆரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், ரசிகர்கள் கவலைப்பட தேவையில்லை என்றும் அவரது குழு தெரிவித்துள்ளது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி அவர் ஓய்வு மற்றும் சிகிச்சையில் கவனம் செலுத்த உள்ளார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *