சமுதாய மறுமலர்ச்சிக்கு விரைவில் புத்தாக்கத் திட்டங்கள் - ஓம்ஸ் பா.தியாகராஜன்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக 24-

தமிழறிஞர் தனித்தமிழ்த் தந்தை மறைமலை அடிகளாரின் 150 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு, மறைமலை அடிகளார் 150 ஆவது ஆண்டு பிறந்தநாள் மங்கலப் பெருவிழா எனும் நிகழ்வு, நேற்று தலைநகர் பிரிக்பீல்ட்ஸ் விசாலாட்சி உணவக மண்டபத்தில்  வெகு சிறப்பாக  நடைபெற்றது.

ஓம்ஸ் அறவாரியத்தின் ஆதரவில் நடைபெற்ற இந்நிகழ்வில், மறைமலை அடிகளாரின் பெயரன் மறை திரு தாயுமானவன் எழுதிய  ‘தனித்தமிழ்த் தந்தையின் வரலாற்றுச்சுவடுகள்’ எனும் நூலும் வெளியீடு கண்டது.

ஓம்ஸ் அறவாரியத் தலைவரும், மலேசிய அரிமா சங்கத்தின் தோற்றுநருமான ஓம்ஸ் பா.தியாகராஜன் இந்நிகழ்விற்கு சிறப்பு வருகை மேற்கொண்டு, ‘தனித்தமிழ்த் தந்தையின் வரலாற்றுச்சுவடுகள்’ நூலினை வெளியீடு செய்தார். மேலும் பல முக்கிய பிரமுகர்களும், தமிழ் ஆர்வலர்களும்  இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நூலாசிரியரும், மறைமலை அடிகளாரின் பேரனுமான மறை திரு தாயுமானவன், இதுவரை அறிந்திராத  அடிகளார் குறித்த பல முக்கிய தகவல்களை எடுத்துரைத்தார்.

நிகழ்வின் ஏற்பாட்டுக் குழு தலைவர் பொன்ரங்கன் உலக அளவில் தமிழர்களுக்காக ஒரு வலுவான பொருளாதார அமைப்பை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

நிகழ்வில் பேசிய ஓம்ஸ் பா தியாகராஜன் தமிழ் அழியும் அபாயத்தில் இருப்பதாகவும், தமிழில் பேசுவது குறைந்து வருவதாகவும் வருத்தம் தெரிவித்தார். மேலும் தற்போதைய அரசியல் சூழல் குறித்தும், அன்வாருடன் நடத்திய பேச்சுவார்த்தை குறித்தும் அவர் விவரித்தார்.

என்ன  செய்தால் இந்திய சமூகத்திற்குப் பயனாக இருக்கும் என்று அன்வார் தம்மிடம் கேட்டதாகத் தெரிவித்த ஓம்ஸ் பா தியாகராஜன், அதற்கான திட்டத்தை தாம் பிரதமரிடம் தெரிவித்ததாகவும், நம் சமுதாயத்திற்கான மிக முக்கிய திட்டத்தை தாங்கள் வரையறுக்கவிருப்பதாகவும் கூறினார்.

குத்துவிளக்கேற்றி, தமிழ் வாழ்த்தோடு தொடங்கிய இந்நிகழ்விற்கு வருகை தந்த அனவரையும்  தமிழ் ஆர்வலர்  அரசேந்திரன் வரவேற்றார். தமிழன்பர்   இளஞ்செழியன் குரலில் தமிழ் வாழ்த்து ஒலித்ததோடு அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *