இன்டர் மிலன், ஸ்லாவியா பிராக்கை 3-0 என வீழ்த்தி அபாரம்

top-news

மிலன், அக். 2-

செய்தி-வெற்றி மைந்தன்

இன்டர் மிலன் அணி, இந்த சீசனின் சாம்பியன்ஸ் லீக் தொடரில் தனது அற்புதமான தொடக்கத்தைத் தொடர்ந்து, சான் சிரோ மைதானத்தில் ஸ்லாவியா பிராக் அணியை 3-0 என்ற கணக்கில் எளிதாக வீழ்த்தியது.

அணியின் கேப்டன் லவ்டாரோ மார்டினெஸ் ஒவ்வொரு பாதியிலும் ஒரு கோல் அடித்ததுடன், டென்ஸல் டம்ப்ரைஸ் மற்றொரு கோலைப் பதிவு செய்தார். இந்த ஆதிக்கம் செலுத்திய வெற்றியின் மூலம், இன்டர் மிலன், ரியல் மாட்ரிட், பயர்ன் மியூனிக் அணிகளுடன் இணைந்து, இரண்டு போட்டிகளில் ஆறு புள்ளிகளைப் பெற்று முன்னிலை வகிக்கிறது.

கடந்த சீசனின் இறுதிப் போட்டியில் விளையாடிய இன்டர், தற்போது அனைத்து போட்டிகளிலும் தொடர்ச்சியாக நான்கு வெற்றிகளைப் பதிவு செய்து, மிலனில் மூன்று புள்ளிகளை முழுமையாகப் பெற்றது. மார்டினெஸ், 30-ஆவது நிமிடத்தில் முதல் கோலை அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். ஸ்லாவியாவின் கோல்கீப்பர் ஜின்ட்ரிச் ஸ்டானெக் அளித்த பலவீனமான பாஸை, அர்ஜென்டினாவைச் சேர்ந்த இந்த முன்கள வீரர் டேவிட் ஜிமாவிடமிருந்து பறித்து, கோல் அடித்தார்.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *