கால்பந்து வரலாற்றில் லியோனல் மெஸ்ஸி புதிய சாதனை!

top-news

நியூயார்க், அக்.5-

கால்பந்து வரலாற்றில் பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி புதிய சாதனை படைத்துள்ளார்.எம்எல்எஸ் எனப்படும் மேஜர் லீக் கால்பந்து தொடரில் மெஸ்ஸி இண்டர் மியாமி அணிக்காக விளையாடுகிறார்.

இந்தப் போட்டியில் கொழும்புஸ் அணியும் மெஸ்ஸியின் இண்டர்மியாமி அணியும் மோதின.இந்தப் போட்டியில் 3-2 என இன்டர் மியாமி வென்றது.இந்த வெற்றியின் மூலம் இண்டர்மியாமி அணி முதல்முறையாக மேஜர் லீக்கின் சப்போர்டர்ஸ் கிண்ணத்தை வென்றுள்ளது.

இந்த சீசனில் சிறப்பாக விளையாடும் ஓர் அணிக்கு புள்ளிகளின் அடிப்படையில் இந்த விருது கொடுப்பது வழக்கம்.68 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருக்கும் இண்டர்மியாமி அணிக்கு இந்த விருது வழங்கப்பட்டது.இண்டர்மியாமி அணிக்கு இது முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.



https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *