ஜோர்டான், ஐக்கிய அரபு அமீரகம் மீது ஈரான் தாக்குதல் – மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்
- Surendran Sumdraraj
- 01 Sep, 2026
ஹாமான், செப். 1 –
அமெரிக்காவின் தாக்குதலுக்குப் பதிலடியாக ஜோர்டான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இஸ்ரேல் மற்றும் பல அரபு நாடுகளின் பகுதிகளைக் குறிவைத்து ஈரான் தாக்குதல்களை நடத்தியது. மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க படைத்தளங்களும் தாக்கப்பட்டன. மேலும், ஹர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையும் உயர்ந்தது.
பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து சில நாட்களாகப் பதற்றம் தணிந்திருந்தது. இந்நிலையில், ஹர்முஸ் ஜலசந்தியில் ஈரான் கண்ணிவெடிகளை பதிக்க முயன்றதாக குற்றஞ்சாட்டிய அமெரிக்கா, ஈரானின் லாரக் தீவில் உள்ள ஏவுகணை ஏவு தளங்களைத் தாக்கியது.
இந்த தாக்குதலில் 2 பேர் உயிரிழந்ததாகவும், பாதுகாப்புப் படையினர் மற்றும் பொதுமக்கள் பலர் காயமடைந்ததாகவும் ஈரான் தெரிவித்தது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



