ஈரான் சரக்கு கப்பல் மீது உக்ரைன் தாக்குதல் – ஒருவர் பலி; பதற்றம் அதிகரிப்பு
- Surendran Sumdraraj
- 27 Jul, 2026
தெஹ்ரான், ஜூலை 27-
காஸ்பியன் கடலில் பயணித்த ஈரான் சரக்கு கப்பல் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக ஈரான் குற்றம்சாட்டியுள்ளது. இந்த தாக்குதலில் கப்பல் பணியாளர் ஒருவர் உயிரிழந்ததாகவும், மற்றொருவர் காயமடைந்ததாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக ஈரான் வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. உக்ரைன் நடத்தியதாகக் கூறப்படும் இந்த தாக்குதல், சர்வதேச சட்டங்களுக்கு எதிரான நடவடிக்கை என்றும், இதற்கு உரிய பதிலடி வழங்கப்படும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.
இதனிடையே, உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கி, காஸ்பியன் கடல் பகுதியில் ரஷியாவுடன் தொடர்புடைய ராணுவப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்ட கப்பல்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவித்தார். ரஷியாவுக்கு ராணுவ உதவிகளை வழங்கும் நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் இந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக உக்ரைன் தரப்பு கூறியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



