உலகக் கோப்பைக்கு முன் விசா சிக்கல்: FIFA மீது ஈரான் வீரர் அதிருப்தி

top-news
FREE WEBSITE AD

டிஜுவானா (மெக்சிகோ), ஜூன் 8 –

2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரை முன்னிட்டு அமெரிக்கா விசா பெறுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து ஈரான் தேசிய அணியின் மூத்த வீரர் Ehsan Hajsafi அதிருப்தி தெரிவித்துள்ளார்.

ஈரான் அணியின் முக்கிய அதிகாரிகள் சிலருக்கு இதுவரை அமெரிக்க விசா வழங்கப்படாததால், அணி தனது பயிற்சி முகாமை அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் உள்ள டுசானில் இருந்து மெக்சிகோவின் டிஜுவானாவிற்கு மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

போர் சூழ்நிலை மற்றும் பாதுகாப்பு தொடர்பான கூடுதல் பரிசோதனைகள் காரணமாக விசா செயல்முறையில் தாமதம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் உலகக் கோப்பை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஈரான் அணி சிரமங்களை எதிர்கொண்டுள்ளது.

இதுகுறித்து பேசிய எஹ்சான் ஹஜ்சாஃபி, “இறுதியாக எங்கள் அணி மெக்சிகோவை பாதுகாப்பாக வந்தடைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அனைவரும் நல்ல நிலையில் உள்ளோம். ஆனால் FIFA குறித்து எனக்கு சில கேள்விகள் உள்ளன. இந்த விசா செயல்முறை ஏன் இவ்வளவு காலம் எடுத்துக்கொள்கிறது?” என்று ஆதங்கம் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், உலகக் கோப்பை போன்ற மிகப்பெரிய போட்டிக்குத் தயாராகும் அணிகளுக்கு தேவையான நிர்வாக உதவிகள் விரைவாக வழங்கப்பட வேண்டும் என்றார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *