உலகக் கோப்பை 2026: ஈரானுக்கு பதிலாக இத்தாலி? – FIFA மறுப்பு

top-news

FIFA, 2026 உலகக் கோப்பை போட்டியில் Iran அணியை நீக்கி Italy அணியை சேர்க்க வேண்டும் என்ற பரிந்துரையை முற்றிலும் நிராகரித்துள்ளது.

இந்த பரிந்துரையை அமெரிக்காவின் சிறப்பு தூதர் Paolo Zampolli, முன்னாள் அதிபர் Donald Trump மற்றும் FIFA தலைவர் Gianni Infantino ஆகியோரிடம் முன்வைத்ததாக தகவல்கள் வெளியாகின.

மிலானில் பிறந்த சாம்போலி, நான்கு முறை உலகக் கோப்பை வென்ற இத்தாலி போன்ற அணிக்கு, தகுதி பெறாத நிலையிலும் இடம் வழங்கப்பட வேண்டும் என வாதிட்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால், FIFA தரப்பில் இருந்து “ஈரான் அணி உலகக் கோப்பையில் நிச்சயமாக பங்கேற்கும்” எனத் தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே தகுதி பெற்ற அணிகளை மாற்றுவதற்கான எந்தத் திட்டமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *