ஜெங்கா மருத்துவமனையில் தீ! 12 குழந்தைகள் உட்பட 17 நோயாளிகள் பாதுகாப்பாக வெளியேறினர்
- Shan Siva
- 09 Sep, 2026
மாரான். செப் 9: மாரான், ஜெங்கா (Jengka) மருத்துவமனையில் இன்று ஏற்பட்ட ஒரு சிறிய தீ விபத்தில், குழந்தைகள் மற்றும் பெண்கள் வார்டுகளின் மேற்கூரை சேதமடைந்த போதிலும், 12 குழந்தைகள் உட்பட மொத்தம் 17 நோயாளிகள் எவ்விதப் பாதிப்புமின்றி பாதுகாப்பாக வெளியேறினர்.
மாலை 6.50 மணியளவில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்தினால், இவ்விரு வார்டுகளிலும் உள்ள மேற்கூரை மற்றும் மின் வயரிங் அமைப்பின் ஒரு பகுதி சேதமடைந்தது.
மருத்துவமனை கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது குறித்த தகவல் மாலை 7 மணிக்குக் கிடைத்ததாக மாரான் மாவட்டக் காவல் துறைத் தலைவர் கண்காணிப்பாளர் வோங் கிம் வாய் (Wong Kim Wai) தெரிவித்தார்.
தீயணைப்புப் படையினர் 20 நிமிடங்களுக்குள் தீயை அணைத்தனர். குழந்தைகள் மற்றும் பெண்கள் வார்டுகளின் மேற்கூரையில் தீ விபத்து தொடங்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

