பல்கலைக்கழகத்தில் தீ! 26 மோட்டார் சைக்கிள்கள் நாசம்!

top-news
FREE WEBSITE AD

இன்று  அதிகாலை யுனிவர்சிட்டி மலேசியா பெர்லிஸ் (UniMAP) இல் உள்ள ஆண் விடுதியின் பார்க்கிங் பகுதியில் தீப்பிடித்ததில் மொத்தம் 26 மோட்டார் சைக்கிள்கள் தீயில் எரிந்தன. மேலும் 10 மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தன.

இந்த சம்பவம் குறித்து அதிகாலை 4.43 மணிக்கு தங்களுக்கு தகவல் கிடைத்ததாக அரவ் மாவட்ட காவல்துறை தலைவர் அஹ்மத் மொஹ்சின் எம்.டி ரோடி தெரிவித்தார்.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் தடயவியல் விசாரணை அறிக்கைக்காக காத்திருப்பதாக அவர் கூறினார்.

குற்றப் புலனாய்வு அதிகாரிகள் ஆரம்பகக்ட்ட விசாரணைகளுக்காக சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர் என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

இதற்கிடையில், பெர்லிஸ் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் மூத்த தீயணைப்பு கண்காணிப்பாளர் ஐ முகமது ஜைதி மாத் கூறுகையில், அராவ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த ஆறு பணியாளர்களை ஈடுபடுத்தும் தீயை அணைக்கும் பணி அதிகாலை 5.52 மணிக்கு முடிவடைந்ததாகத் தெரிவித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *