பள்ளியில் மாணவி கொலை! 3 மாணவர்கள் கைது!

top-news

அக்டோபர் 4,

இடைநிலைப்பள்ளியில் 16 வயதான மாணவி சடலமாக மீட்கப்பட்டதன் தொடர்ச்சியாக அதே பள்ளியிலும் பயிலும் 16 வயதுள்ள மூன்று ஆண் மாணவர்களைத் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கும்படி Batu Pahat Majistret நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. கூடுதல் வகுப்பிற்காகப் பள்ளிக்கு வந்த 16 வயது Irene Sofiya எனும் மாணவியின் சடலத்தைப் பள்ளி மண்டபத்திலிருந்து மீட்டதாக ஜொகூர் மாநிலக் காவல்துறை தலைவர்  Datuk Ab Rahaman Arsad தெரிவித்தார்.

மாணவியைக் கொலை செய்ததாக நம்பப்படும் மூன்று ஆண் மாணவர்களும் நேற்று இரவு 7 மணிக்கு
BATU PAHAT பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களிடமிருந்து சந்தேகப்படும்படியான பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக  ஜொகூர் மாநிலக் காவல்துறை தலைவர்  Datuk Ab Rahaman Arsad தெரிவித்தார். உயிரிழந்த மாணவி கூடுதல் வகுப்பு முடிந்தும் வீட்டுக்கு வராததால் அவருடைய பாட்டி சம்மந்தப்பட்ட பள்ளிக்குச் சென்றதாகவும் பள்ளி காவலர்களுடன் பள்ளியில் தேடிய போது 16 வயதான IRENE SOFIYA எனும் மாணவியின் உடல் பள்ளி மண்டபத்தில் கிடந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *