கலிமந்தானில் தொடரும் தீ! மலேசியவில் புகைமூட்டத்தை அதிகரிக்க வாய்ப்பு!
- Shan Siva
- 15 Sep, 2026
கோலாலம்பூர், செப் 15:
இந்தோனேசியாவின் கலிமந்தானில் தீப்பற்றிய பகுதிகளின் எண்ணிக்கை நேற்று 808 ஆக உயர்ந்தது. இது மலேசியாவைப் பாதிக்கும் என்றும், மேலும் எல்லை
தாண்டிய புகைமூட்டத்தின் அபாயத்தை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்குப்
பருவமழைக் காலத்தில், கலிமந்தானில்
உள்ள காடுகள் மற்றும் நிலங்களில் ஏற்பட்ட தீயிலிருந்து புகை மலேசியாவை நோக்கி
வீசுவதாக மலேசிய வானிலை ஆய்வுமையத்தின் தலைமை இயக்குநர் ஹிஷாம் அனிப் கூறினார்.
இந்தப் பருவம்
அக்டோபரில் மட்டுமே முடிவடைய வாய்ப்புள்ளது என்று அவர் குறிப்பிடுள்ளார்.
ஆசியான் சிறப்பு
வானிலை மையத்தின் தரவுகளின்படி, கலிமந்தானில்
தீப்பொறிப் பகுதிகளின் எண்ணிக்கை மூன்று நாட்களுக்கு முன்பு 301 ஆக இருந்து, செப்டம்பர் 13 அன்று 461 ஆகவும், நேற்று 808 ஆகவும் உயர்ந்தது.
இருப்பினும்,
மேற்கு சரவாக்கில் இந்த வாரம் முழுவதும் மழை
பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது, இது எல்லை தாண்டிய புகைமூட்டத்தைக் குறைக்கக்கூடும்.
2027 ஆம் ஆண்டின்
தொடக்கத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியவுடன் காற்றின் தரம் முழுமையாக
மீண்டுவிடும் என்று எதிர்பார்க்கலாம். இருப்பினும் இது வறண்ட மற்றும் வெப்பமான
வானிலையைக் கொண்டுவரும் என்று ஹிஷாம் கூறினார்.
மதியம் 12 மணி நிலவரப்படி, நாடு முழுவதும் உள்ள 68 காற்று மாசுபடுத்தும் குறியீட்டு நிலையங்களில் 38 நிலையங்கள் ஆரோக்கியமற்ற காற்றின் தரத்தைப்
பதிவு செய்துள்ளன. இதில், சரவாக்கின்
செரியான் மற்றும் சிலாங்கூரின் ஜொஹான் செத்தியா ஆகிய இடங்களில் தலா 185 என்ற மிக உயர்ந்த அளவீடு பதிவாகியுள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

