நெடுஞ்சாலையில் காரின் கூரையைத் திறந்து நின்று பயணித்த சிறுமிகள்! கார் ஓட்டுநரை போலீஸ் தேடுகிறது
- Shan Siva
- 03 Sep, 2026
கோலாலம்பூர், செப் 3: நேற்று மேரு-ஜெலாப்பாங் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, காரின் மேற்கூரை வழியாக இரண்டு குழந்தைகளை ஏற அனுமதித்த காரின் உரிமையாளரை பேராக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான 21 வினாடி காணொளி ஒன்று முகநூலில் கண்டறியப்பட்டதை அடுத்து விசாரணை தொடங்கப்பட்டதாக ஈப்போ காவல்துறைத் தலைவர் நஜிப் ஹம்சா தெரிவித்துள்ளார்.
ஓட்டுநரிடம் வாக்குமூலம் பெறுவதற்காக அவரைத் தேடி வருவதாக அவர் கூறினார்.
மேலும், இந்தச் சம்பவம் குறித்த தகவல் தெரிந்தவர்கள் ஈப்போ காவல்துறை தலைமையகத்தை தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
பரவலான அந்தக் காணொளியில், இரண்டு சிறுமிகள் ஓடிக்கொண்டிருந்த காரின் மேற்கூரை வழியாக ஏறுவது காட்டப்பட்டது. இது இணையத்தில் விமர்சனங்களைத் தூண்டியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



