பாஜக ஆளும் மாநிலங்களில்தான் நீட் முறைகேடுகள் தொடர்கின்றன – மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு
- Surendran Sumdraraj
- 30 Jul, 2026
சென்னை, ஜூலை 30-
பாஜக ஆட்சி நடைபெறும் மாநிலங்களில்தான் நீட் தேர்வு தொடர்பான முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இந்த விவகாரம் குறித்து பிரதமர் மற்றும் மகாராஷ்டிர முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மகாராஷ்டிர மாநிலத்தின் லாத்தூர் பகுதியில் நீட் வினாத்தாள் ரூ.5 லட்சத்திற்கு பேரம் பேசப்பட்டதாகவும், தேர்வு நடைபெறுவதற்கு 10 நாட்களுக்கு முன்பே 132 கேள்விகள் செல்போனில் புகைப்படம் எடுத்து கசியவிடப்பட்டதாகவும் கூறியுள்ளார். மேலும், ரூ.30,000-க்கு PhonePe மூலம் வினாத்தாள் விற்பனை செய்யப்பட்டு, கேரளா முதல் ராஜஸ்தான் வரை வாட்ஸ்அப் மூலம் பரவியதாக சிபிஐ விசாரணை அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



