உலகின் சிறந்த குறைந்த கட்டண விமான நிறுவனமாக ஏர் ஏசியா அறிவிப்பு! - தொடர்ந்து 15 வது ஆண்டாக சாதனை

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப் 24 : ஸ்கைட்ராக்ஸின் 2024 உலக ஏர்லைன் விருதுகளில், தொடர்ந்து 15 வது ஆண்டாக ஏர் ஏசியா உலகின் சிறந்த குறைந்த கட்டண விமான நிறுவனமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 31வது இடத்தில் இருந்து ஒரு இடம் முன்னேறி, உலகின் சிறந்த விமான நிறுவனங்களில் 30வது இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளது.

Capital A நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டோனி பெர்னாண்டஸ், விமான நிறுவனத்திற்கு வாக்களித்த பயணிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளதோடு, தொடர்ந்து 15வது ஆண்டாக சிறந்த தரம் மற்றும் சிறப்பை வழங்குவதற்கான முயற்சிகளை அங்கீகரித்தார்.

இதுபோன்ற வெற்றிப் பாதையை அடைவதில் வேறு எந்த நிறுவனங்களும் என் மனதில் வரவில்லை, நாங்கள் அதைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக அயராது உழைத்த எங்களின் அனைத்து நட்சத்திரங்களுக்கும் இந்த விருதை அர்ப்பணிக்கிறோம். மேலும் AirAsia வின் அனைத்து ஏற்ற இறக்கங்களிலும்  எபோதும் விசுவாசமாக இருந்த அனைவருக்கும் இவ்விருதினை அர்ப்பணிக்கிறோம் என்று அவர் அண்மையில் Skytrax இடம் தெரிவித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *