சைபர்ஜெயாவில் முதல் முறையாக நடைபெற்ற தேசிய விரைவு அஞ்சல் சேவை தினம்!
- Muthu Kumar
- 10 Nov, 2024
சைபர்ஜெயா, நவ. 10-
விரைவு அஞ்சல் தொழில்துறைக்கான பாதுகாப்பு கடப்பிதழ் பயிற்சித் திட்டத்தில் விரைவு அஞ்சல் சேவை நிறுவனங்கள் பங்கேற்கும்படி வலியுறுத்தப்படுகிறது. தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் பொட்டலங்களை அனுப்பும் தரத்தையும் அந்நடவடிக்கை மேம்படுத்தும் என்று தொடர்பு அமைச்சர், ஃபாஹ்மி ஃபட்சில் கூறினார்.
சைபர்ஜெயாவில் நேற்று முதல் முறையாக நடைபெற்ற தேசிய விரைவு அஞ்சல் சேவை தினத்தைத் தொடக்கி வைத்த பின்னர், செய்தியாளர்களிடம் ஃபாஹ்மி அவ்வாறு தெரிவித்தார். விரைவு அஞ்சல் தொழில்துறை ஒரு லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலேசியர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளது.
2025ஆம் ஆண்டுக்குள் தலா ஒரு தனிநபர் 30 பொட்டலங்கள் எனும் அரசாங்கத்தின் வளர்ச்சி விகித கணிப்பிற்கு ஏற்ப அத்துறை தொடர்ந்து வளர்ச்சி அடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, இம்மாதம் 22 தொடங்கி 24ஆம் தேதி வரை கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ள மடானி அரசாங்கத்தின் இரண்டு ஆண்டுகள் நிறைவு விழாவில் இரண்டு லட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஃபாஹ்மி ஃபட்சில் குறிப்பிட்டார்.
சரியான இடத்தில் இந்நிகழ்ச்சி நடைபெறவிருப்பதால், அந்த இலக்கை அடைய முடியும் என்று தாம் நம்புவதாக அவர் கூறினார். “இது சேகரிக்கப்படும், செயல்படுத்தும் நிலை பொது சேவை துறையின் நிகழ்ச்சி நிரல் பற்றிய தகவலைத் தெரிவிக்கும். கோலாலம்பூர் மலேசிய பொது சேவையின் கூட்டு நிர்ணய பிரகடனத்தின் அறிவிப்பும் நடைபெறும்", என்று அவர் கூறினார்.
மடானி அரசாங்கத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழாவிற்கான ஏற்பாடுகள், அரசாங்கத் தலைமை செயலாளர் டான்ஸ்ரீ ஷம்சூல் அஸ்ரி அபு பகார் தலைமையில் சிறப்பாக நடைபெற்று வருவதாக, அவர் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *