‘ஜெயிலர் 2’ காரணமாக தனுஷின் ‘ஓம்’ வெளியீடு தள்ளிப்போகிறதா?

top-news

சென்னை: தனுஷ் நடித்துள்ள ‘ஓம்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி மாற்றப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் அக்டோபர் 15-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், அதற்கு அடுத்த நாளான அக்டோபர் 16-ஆம் தேதி ‘ஓம்’ வெளியாக திட்டமிடப்பட்டிருப்பதே இந்த மாற்றத்திற்கான காரணமாகக் கூறப்படுகிறது.

‘அமரன்’ திரைப்படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஓம்’ படத்தில் தனுஷ் நாயகனாக நடித்துள்ளார். அவருடன் ஸ்ரீலீலா, சாய் பல்லவி, மம்முட்டி மற்றும் நஸ்ருதீன் ஷா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தை அக்டோபர் 16-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிட திட்டமிட்டுள்ளதாக படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.

ஆனால், ‘ஜெயிலர் 2’ அக்டோபர் 15-ஆம் தேதி வெளியாக இருப்பதால், இரு பெரிய படங்களும் ஒரே நேரத்தில் திரையரங்குகளில் நேரடியாக மோதும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் ‘ஓம்’ படத்தின் வெளியீட்டை தள்ளிவைக்க படக்குழு ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *