ராட்சசன் 2, கட்டா குஸ்தி 2 பற்றி விஷ்ணு விஷால் கொடுத்த மாஸ் அப்டேட்!
- Muthu Kumar
- 08 Jul, 2025
வெண்ணிலா கபடிக்குழு திரைப்படத்தின் மூலம் நடிகராக மாறிய நடிகர் விஷ்ணு விஷால், அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல வெற்றிப்படத்தை கொடுத்தார்.அவர் நடிப்பில் வெளியான மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்த திரைப்படம் தான் ராட்சசன். சைக்கோ திரில்லர் ஜனரில் உருவான அந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த நிலையில், அது விஷ்ணு விஷால் அப்டேட் கொடுத்துள்ளார்.
2018ம் ஆண்டு இயக்குநர் ராம் குமார் இயக்கத்தில், விஷ்ணு விஷால் ஹீரோவாக நடித்த திரைப்படம் ராட்டசன். அதில், அமலா பால், முனீஸ்காந்த், அம்மு அபிராமி, காளி வெங்கட் என பலரும் நடித்திருந்தனர். மன தளவில் பாதிக்கப்பட்ட ஒருவன், பள்ளி மாணவர்கள் சிலரை கடத்தி கொடூரமாக கொலை செய்து வருகிறான். அது யார்,அந்த கொலையை செய்வதற்கான காரணம் என்ன என்பதை, மிகவும் சுவாரசியமாக சொன்ன திரைப்படம் தான் ராட்சசன். இந்த படத்தில், துடிப்பான ஒரு கான்ஸ்டபிளாக விஷ்ணு விஷால் நடித்து இருப்பார். தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்தது.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ராட்சசன் 2 எப்போது என்கிற கேள்வி தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. விஷ்ணு விஷால் எந்த ஒரு ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும், ராட்சசன் 2 எப்போ என்பதே ரசிகர்களின் கேள்வியாக கேட்டு வந்தனர். இந்நிலையில், விஷ்ணு விஷாலின் தம்பி நடிக்கும் 'ஓஹோ எந்தன் பேபி' என்ற படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஷ்ணு விஷால், அடுத்த ஆண்டு ராட்சசன் 2 படத்தின் வேலை தொடங்கப்படும் என்றார்.
அதே போல, எனது அடுத்த படமான கட்டா குஸ்தி 2வும் வருது என கூறினார். இது அப்படத்தை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. 'ஓஹோ எந்தன் பேபி' படம் வரும் 11ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது.
ராட்சசன் பட இயக்குநர் ராம் குமார் இயக்கத்தில் தற்போது இரண்டு வானம் படத்தில் விஷ்ணு விஷால் நடித்து வருகிறார். கதாநாயகியாக மமிதா பைஜூ நடித்துள்ளார். இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்து உள்ளது. இப்படம் ஒரு ஃபேண்டசி ரொமான்டிக் திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.விஷ்ணு விஷால் கடைசியாக நடித்த லால் சலாம் திரைப்படம் பெரும் தோல்வித் திரைப்படமானது. அந்த திரைப்படத்தை ரஜினியில் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி இருந்தார். இந்த திரைப்படத்திற்கு பிறகு விஷ்ணுவிஷால் இரண்டு வானம் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய இவர், வேலையினு வந்துட்டா வெள்ளைக்காரன், சிலுக்குவார்பட்டி சிங்கம், FIR, கட்டா குஸ்தி போன்ற படங்களையும் தயாரித்தார். இந்த படங்களைத் தொடர்ந்து மோகன்தாஸ் என்ற படத்தை தயாரித்து வந்தார். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், இந்திரஜித் சுகுமாரன், லல்லு, கருணாகரன், பிரகாஷ் ராகவன் மற்றும் ஷாரிக் ஹாசன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று படத்தின் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்த நிலையில் படம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அந்த படத்தின் டீசரிலே கையில் சுத்தியலுடன் ரத்தம் சொட்ட சொட்ட நின்று மிரட்டலாக போஸ் கொடுத்து இருந்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



