அதிகரிக்கும் புகைமூட்டம்! இந்தோனேசிய அதிபருடன் அன்வார் பேச்சுவார்த்தை!

top-news

கோலாலம்பூர், அக் 8: இந்தோனேசியாவின் கலிமந்தானில் ஏற்படும் காட்டுத்தீ மற்றும் நிலத்தீயால் மலேசியாவில் மோசமடைந்து வரும் புகைமூட்ட நிலை குறித்து, பிரதமர் அன்வார் இப்ராகிம் இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியான்டோவுடன் தொடர்பு கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.

2027-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிப்புப் பணிகளை ஆய்வு செய்த பிறகு நிதி அமைச்சகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அன்வார், தற்போதைய புகைமூட்ட நிலை பொதுமக்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் என்பதால் அது "மிகவும் கவலைக்குரியதாக" இருப்பதாகக் கூறினார்.

 இந்நிலையில், தாம் இந்தோனேசிய அதிபர் பிரபோவோவைத் தொடர்பு கொண்டதாகவும்,  அவரும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க ஒப்புக்கொண்டதாகவும் அன்வார் கூறினார்.

இப்பிரச்சினை குறித்து விவாதிக்க ஆசியான் (ASEAN) நாடுகளின் சுற்றுச்சூழல் அமைச்சர்களுக்கு இடையிலான கூட்டத்தை ஏற்பாடு செய்யுமாறு வெளியுறவு அமைச்சர் முகமது ஹசானிடம் கேட்டுக்கொண்டதாகவும் அன்வார் தெரிவித்தார்.

ஆகஸ்ட் மாதம் முதல் மலேசியா புகைமூட்டப் பிரச்சினையை எதிர்கொண்டு வருகிறது. கலிமந்தனில் ஏற்படும் தீ விபத்துகளின் பாதிப்பை முதலில் சரவாக் மாநிலம் கடுமையாக எதிர்கொண்டது!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *