அதிகரிக்கும் புகைமூட்டம்... இரு மாவட்ட பள்ளிகள் மூடல்!

top-news

கோலாலம்பூர், செப் 21: பல நாட்களாக நிலவிய புகைமூட்டத்திலிருந்து சற்று தணிந்திருந்த நிலையில், சரவாக்கில் காற்றின் தரம் மோசமடைந்து வருவதால், லுபோக் அந்து மற்றும் கனோவிட் மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

காலை 10 மணியளவில், கனோவிட் மற்றும் லுபோக் அந்து மாவட்டங்களில் முறையே 212 மற்றும் 207 என்ற மிகவும் ஆரோக்கியமற்ற காற்று மாசுபாடு கூறியீட்டு (API) அளவுகள் பதிவானதைத் தொடர்ந்து, பள்ளிகளை மூட முடிவு செய்ததாக சரவாக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் காலத்தில், பாடங்கள் இணையவழியில் நடத்தப்படும் என்று போர்னியோ போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், API அளவுகள் 200-ஐத் தாண்டிய மாவட்டங்களுக்கு அருகிலுள்ள பள்ளிகளைத் தற்காலிகமாக மூடுவதா இல்லையா என்பதை முடிவு செய்யும் அதிகாரம் அவற்றுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அத்துறை கூறியுள்ளது!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *