அதிகரிக்கும் போதை அடிமைகள்! - உள்துறை அமைச்சு வருத்தம்

top-news

கோலாலம்பூர், அக் 5:  ஜூன் மாதம் வரையிலான நிலவரப்படி, நாடு முழுவதும் மொத்தம் 130,307 போதைப்பொருள் அடிமைகள் மற்றும் பயன்பாட்டாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் திரெங்கானு, கிளந்தான், கெடா மற்றும் பெர்லிஸ் ஆகிய மாநிலங்களில் தேசிய விகிதத்தை விட அதிகமான, கவலைக்குரிய அளவுகள் பதிவாகியுள்ளன.

தற்போதைய தேசிய விகிதம் 100,000 மக்களுக்கு 381 வழக்குகள் என்ற அளவில் உள்ளதாகவும், ஆனால் குறிப்பிட்ட அந்த நான்கு மாநிலங்களிலும் இதைவிட மிக அதிகமான விகிதங்கள் பதிவாகியுள்ளதாகவும் உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் 15 முதல் 39 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், அவர்களில் பெரும்பாலானோர் SPM அல்லது அதற்குக் குறைவான கல்வித் தகுதி கொண்டவர்கள் என்றும் சைஃபுதீன் நசுத்தியோன் குறிப்பிட்டார்.

தொழில் அடிப்படையில் பார்த்தால், வேலையில்லாதவர்களே அதிக எண்ணிக்கையில் உள்ளனர்; அவர்களைத் தொடர்ந்து சுயதொழில் செய்பவர்களும் தனியார் துறையில் பணிபுரிபவர்களும் உள்ளனர்  என்று அவர் கூறினார்.

போதைப்பொருள் பிரச்சினையை எதிர்கொள்வதற்கு வலுவான அரசியல் உறுதிப்பாடும் அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பும் தேவை; ஏனெனில் இது வெறும் தனிநபர் சார்ந்த பிரச்சினை மட்டுமல்ல, ஒரு தேசியப் பிரச்சினையாகவும் மாறியுள்ளது என்று அவர் கூறினார்!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *