தொழிலிடங்களில் பகடிவதை நடைபெற்று வருவதை தமது அமைச்சு சகித்துக் கொள்ளாது-ஸூல்கிப்ளி!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், அக்.28-

பகடிவதையில் ஈடுபடும் ஊழியர்களுக்கு எதிராக பணிநீக்கம் உட்பட தகுந்த ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சுகாதாரக் கொள்கை சிந்தனைக் குழாமின் தலைவர் அஸ்ருல் காலிப் வலியுறுத்தியுள்ளார். ஆயினும், அத்தகைய ஊழியர்கள் செய்யும் பகடிவதையின் கடுமைக்கு ஏற்ற வகையில்தான் அவர்களுக்குத் தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்று சுகாதார மற்றும் சமூகக் கொள்கை மையம் எனும் சிந்தனைக் குழாமின் தலைவரான அஸ்ருல் குறிப்பிட்டார். அத்தகைய செயல்களில் ஈடுபடும் ஊழியர்களை பதவியிறக்கம் செய்வது, இடைநீக்கம் செய்வது, தேவையேற்படும் பட்சத்தில் பணிநீக்கம் செய்வது போன்ற ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தொழிலிடங்களில் நடைபெற்றுவரும் பகடிவதையை எவ்வாறு தவிர்ப்பது என்பதை விவரிக்கும் வழிகாட்டிகள் விரைவில் வெளியிடப்படும் என்று சுகாதார அமைச்சர் ஸூல்கிப்ளி அமாட் திங்கள்கிழமையன்று தெரிவித்திருந்தார்.தொழிலிடங்களில் பகடிவதை நடைபெற்று வருவதை தமது அமைச்சு சகித்துக் கொள்ளாது என்றும் ஸூல்கிப்ளி கூறியிருந்தார்.

சுகாதார அமைச்சு தனது அனைத்து மருத்துவ மையங்களிலும் கண்காணிப்புப் பணியைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் மலேசிய மணிபால் முன்னாள் ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் கோ கார் சாய் குறிப்பிட்டார்.



ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *