பாலஸ்தீன மசூதிகளுக்கு தீ வைப்பு: இஸ்ரேலிய குடியேறிகள் என சந்தேகிக்கப்படும் 2 பேர் கைது
- Surendran Sumdraraj
- 27 Jul, 2026
ரமல்லா, ஜூலை 27-
மேற்குக் கரையில் உள்ள பாலஸ்தீன கிராமங்களில் அமைந்துள்ள மசூதிகளுக்குத் தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இஸ்ரேலிய குடியேறிகள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
பாலஸ்தீனத்தின் குஸ்ரா மற்றும் கூர் பகுதிகளில் உள்ள மசூதிகள் தாக்கப்பட்டதாகவும், சில இடங்களில் தீ வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குஸ்ரா பகுதியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த மசூதி ஒன்று தீக்கிரையாக்கப்பட்டதாகவும், கூர் பகுதியில் மசூதிக்கு தீ வைக்கும் முயற்சி வழிபாட்டாளர்களால் தடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த தாக்குதல்களுக்குப் பின்னணியில் பழிவாங்கும் நோக்கத்திலான தீவிரவாத நடவடிக்கைகள் இருக்கலாம் என பாலஸ்தீன அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். அதேவேளையில், மத வழிபாட்டு தலங்களை குறிவைக்கும் எந்தவொரு வன்முறையையும் ஏற்க முடியாது என்றும், சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



