தமது உண்மையான பெயர் 'சித்தி ஹஸ்மா' கிடையாது. வெறும் ஹஸ்மாதான்-மகாதீர் துணைவியார்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், அக். 27

தமது உண்மையான பெயர் 'சித்தி ஹஸ்மா' கிடையாது. வெறும் ஹஸ்மாதான் தமது உண்மையான பெயர். 'சித்தி' என்ற பெயர் இடையில் சிலரால் இணைக்கப்பட்ட ஒன்று என முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவின் துணைவியார் தெரிவித்துள்ளார்.

“நான் ஒரு 'சித்தி' அல்ல. நான் பிறந்த பின்னர் எனக்கு வைத்த உண்மையான பெயர் வெறும் ஹஸ்மாதான்" என்று, பிரின்ஸ் கோர்ட் மெடிக்கல் சென்டரின் இரைப்பையியகவியல் ஆலோசகர் டத்தோ டாக்டர் ராயன் பொன்னுதுரையுடனான ஒரு நேர்காணலில் துன் டாக்டர் ஹஸ்மா முஹமட் அலி கூறியுள்ளார்.டாக்டர் மகாதீரும் கலந்து கொண்டிருந்த, டாக்டர் பொன்னுதுரையுடனான இந்த திடீர் நேர்காணலில் ஹஸ்மா இவ்வாறு கூறியிருக்கின்றார்.

ஆனால், 'சித்தி' என்று எப்படி அழைக்கப்பட்டீர்கள் என்று கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, தாம் பணி மாற்றம் செய்யப்பட்டபோது, கெடாவின் அலோர்ஸ்டாரிலிருந்து கோலாலம்பூர் மாநகருக்கு தமது குடும்பம் குடிபெயர்ந்த பின்னர், சில 'அறிவார்ந்த மக்கள்' தமது ஹஸ்மா என்ற பெயருக்கு முன்னால் இந்த 'சித்தி' என்ற பெயரை இணைத்து அழைத்ததாக, 98 வயதுடைய ஹஸ்மா குறிப்பிட்டார்.

“ஆதலால், இங்கே சித்தி நுர்ஹாலிசா, இந்த சித்தி, அந்த சித்தி என்று பலர் இருக்கின்றனர். அதன்அடிப்படையில் எனது பெயருக்கு முன்னால் அவர்கள் 'சித்தி' என்ற பெயரை இணைத்து அழைக்கத் தொடங்கினர்."நான் 'சித்தி' அல்ல, நான் வெறும் ஹஸ்மா மட்டும்தான். இதனால், மக்கள் என்னை இனிமேல் 'சித்தி' என்று அழைக்க மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன்” என்று ஹஸ்மா கூறினார்.

மகாதீரும் (வயது 99) ஹஸ்மாவும் திருமணம் புரிந்து 68 ஆண்டுகள் ஆகின்றன. திருமணம் புரிந்த பின்னர் கோலாலம்பூருக்குத் திரும்புவதற்கு முன்னர் அவர்கள் அலோர்ஸ்டாரில் தங்கி இருந்தனர். மகப்பேறு மற்றும் குழந்தை சுகாதார இலாகாவில் ஒரு மருத்துவ அதிகாரியாக நியமிக்கப்பட்ட முதல் மலேசியப் பெண் இவராவார்.



ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *