தமான் சைன்டெக்ஸ் நீர்த்தேக்கத்தில் காணாமல்போன சிறுவர்கள் சடலமாக மீட்பு!
- Shan Siva
- 10 Aug, 2026
கோலாலம்பூர், ஆக 10: நேற்று காணாமல் போன இரண்டு சிறுவர்களைத் தேடும் பணி, இன்று தாமான் சைன்டெக்ஸில் உள்ள நீர்த்தேக்கத்தில் இருந்து மீட்கப்பட்டபோது சோகத்தில் முடிந்தது.
பலியான 11 மற்றும் 12 வயதுடையவர்கள், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் குழுவினரால் சுமார் இரண்டு மீட்டர் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டனர்.
12 வயது இளைஞனின் சடலம் அதிகாலை 2.12 மணியளவில் கரையிலிருந்து மூன்று மீட்டரில் மீட்கப்பட்டதாகவும், இன்னொரு சிறுவன் கரையிலிருந்து ஐந்து மீட்டர் தொலைவில் அதிகாலை 2.33 மணியளவில் மீட்கப்பட்டதாகவும் நடவடிக்கைகளின் தளபதி ஹைஸ்ருல் ரஹ்மட் தெரிவித்தார்.
ஜாலான் முராய் 2-ல் உள்ள நீர்த்தேக்கத்தின் அருகே சிறுவர்களின் சைக்கிள்கள் மற்றும் செருப்புகள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, இரவு 10.36 மணிக்கு சிறுவர்களின் பெற்றோர் புகார் அளித்ததாக அவர் கூறினார்.
மாலையில் இருந்து சிறுவர்கள் காணாமல் போயுள்ளதாக அவர்களது தந்தையர் தெரிவித்துள்ளனர்.
பாசிர் கூடாங் மற்றும் ஸ்குடாய் தீயணைப்பு நிலையங்களில் இருந்து மொத்தம் 19 பணியாளர்கள் தேடுதல் மற்றும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர், இது அதிகாலை 3 மணிக்கு முடிவடைந்தது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



