அன்வாரால் வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி! Trump புகழாரம்

top-news

கோலாலம்பூர்,  நவ 18: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கம்போடியா – தாய்லாந்து இடையே அமைதியை ஏற்படுத்துவதில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வழங்கிய ஒத்துழைப்பைப் பாராட்டியுள்ளார்.

கடந்த ஆண்டு கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசியான் உச்சநிலை மாநாட்டின்போது, அன்வாருடன் இணைந்து மேற்கொண்ட முயற்சிகளின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டதாக டிரம்ப் குறிப்பிட்டார்.

அந்த ஒப்பந்தத்தின் மூலம் கம்போடியா மற்றும் தாய்லாந்து இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதாகவும், அந்தப் போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து நிலைநிறுத்தி, ஒப்பந்தத்தை முழுமையாகச் செயல்படுத்த அமெரிக்கா உறுதிபூண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மணிலாவில்  நடைபெற்ற அமெரிக்கா – ஆசியான் சிறப்பு உச்சநிலை மாநாட்டில் உரையாற்றியபோது டிரம்ப் இதனைத் தெரிவித்தார்.

மேலும், தாம் மீண்டும் அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு, மலேசியா, கம்போடியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளுடன் முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தென்கிழக்காசியாவின் வர்த்தக முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டிய டிரம்ப், உலகளாவிய கப்பல் போக்குவரத்தில் சுமார் நான்கில் ஒரு பங்கு மலாக்கா நீரிணை வழியாக நடைபெறுவதாகக் குறிப்பிட்டார்.

அத்துடன், அரிய வகைக் கனிமங்கள், அரிய மண் தனிமங்கள் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் தென்கிழக்காசிய நாடுகளுடன் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்த அமெரிக்கா விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்